/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு மருத்துவமனை மீது கணவர் புகார்
/
மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு மருத்துவமனை மீது கணவர் புகார்
மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு மருத்துவமனை மீது கணவர் புகார்
மனைவியை ஏமாற்றி கருக்கலைப்பு மருத்துவமனை மீது கணவர் புகார்
ADDED : ஜூலை 09, 2025 01:22 AM
புன்செய்புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி நாவலர் வீதியை சேர்ந்த, 20 வயது பெண், சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம், 41, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த மனைவியை, மாமனார் சண்முகசுந்தரம், மாமியார் சங்கீதா வீட்டுக்கு வந்து சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர். புளியம்பட்டியில் ஒரு தனியார் மருத்துவமனையில் (பி.ஜி.மருத்துவமனை) கடந்த மாதம், 11ல் குழந்தையின் வளர்ச்சி குறித்து தெரிந்து கொள்ள பரிசோதனை செய்வதாக மயக்க ஊசி போட்டு கருக்கலைப்பு செய்து விட்டனர். கருக்கலைப்பு செய்ய மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு மாமனார், மாமியார், உறவினரான ரத்னா உடந்தையாக இருந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், வெங்கடாசலம் புகாரளித்துள்ளார். இதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
'வெங்கடாசலம், அவரது மனைவி, உறவினர் அந்தியூரை சேர்ந்த ஏழுமலை ஆகியோர், கடந்த மாதம், 21ம் தேதி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். தன்னை தகாத வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக மூவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தனியார் மருத்துவமனை மருத்துவர் சரஸ்வதி, புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்துள்ளார். இருதரப்பு புகாரின்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

