/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணவன் கண் முன்னே மனைவி வெட்டி கொலை
/
கணவன் கண் முன்னே மனைவி வெட்டி கொலை
ADDED : டிச 13, 2024 02:32 AM
ஈரோடு:ஈரோடு, செட்டிபாளையம், பாரதிபாளையத்தை சேர்ந்தவர் நல்லசிவம், 57. இவரது மனைவி கண்ணம்மாள், 56. குழந்தைகள் இல்லை. கண்ணம்மாளின் சொத்து தொடர்பாக, அவருக்கும், உறவினர்களுக்கும் முன்விரோதம் உள்ளது.
எஸ்.பி., அலுவலகம், தாலுாகா போலீஸ் ஸ்டேஷனில் பலமுறை கண்ணம்மாள் புகாரளித்துள்ளார். சொத்து தகராறு, அடிதடி வழக்குகளும் தாலுகா போலீசில் உள்ளது. சொத்து பிரச்னை தொடர்பாக, 2022 முதல் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில், கண்ணம்மாளின் சகோதரர் அர்ஜூனனின் மைத்துனர் சிவக்குமார், நல்லசிவம் வீட்டுக்கு நேற்று மதியம், 3:45 மணிக்கு, 'ஹெல்மெட்' அணிந்து வந்தார். அப்போது சொத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால், சிவக்குமார் சரமாரியாக கண்ணம்மாளை வெட்டிக் கொலை செய்தார். நல்லசிவத்துக்கும் இடது கை மற்றும் காலில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து சிவக்குமார் தப்பினார். தாலுகா போலீசார் கண்ணம்மாள் உடலை கைப்பற்றி, சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

