/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மாஜி' காதலனுடன் தஞ்சம் மனைவியை கொன்ற கணவர்
/
'மாஜி' காதலனுடன் தஞ்சம் மனைவியை கொன்ற கணவர்
ADDED : பிப் 12, 2025 02:15 AM

பவானி:பிரிந்து சென்ற மனைவி, முன்னாள் காதலனுடன் குடும்பம் நடத்தியதால், கணவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் கோபால், 44; வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா, 38; சித்தோடு அருகே வசுவப்பட்டியில் ஒரு மிக்சர் கம்பெனியில் வேலை செய்தார். இரு மகன்கள் உள்ளனர்.
நடத்தையில் சந்தேகத்தால் ஒரு மாதமாக மனைவியை பிரிந்து, வேறு பகுதியில் தங்கி, கோபால் வேலைக்கு சென்று வந்தார். நேற்று மதியம், வசுவப்பட்டி சென்ற கோபால், மிக்சர் கம்பெனியில் இருந்த மனைவியிடம் பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
சித்தோடு போலீசார் கூறியதாவது:
மணிமேகலாவுக்கும், அவருடன் படித்த மோகன்ராஜுக்கும், படித்த காலத்தில் காதல் இருந்துள்ளது. மீண்டும் இருவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மது போதையில் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இருவரும் பிரிந்தனர். பின், மோகன்ராஜுவுடன் மணிமேகலா ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதையறிந்த கோபால், மணிமேகலாவை குத்தி கொன்றுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோபாலை கைது செய்த போலீசார், மோகன்ராஜுவிடமும் விசாரிக்கின்றனர்.

