/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரிந்த மனைவி புகாரில் கணவன் மீது வழக்கு
/
பிரிந்த மனைவி புகாரில் கணவன் மீது வழக்கு
ADDED : நவ 14, 2025 01:22 AM
ஈரோடு, சிவகிரி, குமரன் சாலையை சேர்ந்த பொன்னுசாமி மகள் ஜன ரஞ்சனி. இவரின் கணவர் கார்ல் மாக்ஸ். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். கருத்து வேறுபாட்டால் ஓராண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் பிசியோதெரபிஸ்ட்.
கடந்த, 2024 ஏப்.,20 முதல் நேற்று முன்தினம் வரையிலான காலகட்டத்தில் தனது சான்றிதழ், 15 பவுன் நகை, இருவேறு தனியார் வங்கிகளின் செக் புத்தகம் உள்ளிட்டவற்றை கணவர் வைத்துள்ளார். தனது அனுமதியின்றி செக் புத்தகத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் வழங்கினார். இதன்படி ஏமாற்றி மோசடி செய்ததாக, கார்ல் மாக்ஸ் மீது சிவகிரி போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

