ADDED : ஜூன் 25, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் ராம்குமார், 25, இவரது மனைவி
சினேகா, 25. இருவரும் டெக்ஸ்டைல்சில் பணியாற்றி வருகின்றனர்.
பணிபுரியும் இடத்தில் ஒரு பெண்ணுடன், ராம்குமார் நட்புடன்
பழகியுள்ளார்.
கடந்த, 21 இரவு இது தொடர்பாக சினோகவுக்கும்,
ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர்
சமாதானமாகினர். இந்நிலையில். 22ல் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.
நண்பகல் 11:30 மணிக்கு பாத்ரூம் செல்வதாக கூறி டெக்ஸ்டைல்சில் இருந்து
வெளியே சென்ற ராம்குமார் திரும்பவில்லை.சினேகா அளித்த புகாரின்படி, டவுன் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
