/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.சி.எஸ்.இ.,- ஐ.எஸ்.சி., பள்ளி டி-20 கரூர் லிட்டில் ஏஞ்சலஸ் முதலிடம்

ADDED : ஆக 02, 2025 01:32 AM
பெருந்துறை, தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள ஐ.சி.எஸ்.இ., மற்றும் ஐ.எஸ்.சி., பள்ளி மாணவர்களுக்கான, 2025-26ம் ஆண்டுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி, பெருந்துறையை அடுத்த ஈங்கூர் தி யுனிக் அகாடமி மைதானத்தில், 12வது ஆண்டாக நடந்தது. கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு மண்டலங்களாக, 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது.
இதில், 14 வயது பிரிவு இறுதி போட்டியில், நீலகிரி கோத்தகிரி புனித ஜுட்ஸ் பள்ளி, ஏற்காடு மான்ட்போர்ட் பள்ளியை வென்றது. 17 வயது பிரிவு இறுதி போட்டியில், கோத்தகிரி புனித ஜுட்ஸ் பள்ளி, கரூர் விஜயலட்சுமி வித்யாலயா பன்னாட்டு பள்ளியை வென்றது. 19 வயது பிரிவு இறுதி போட்டியில் கரூர் லிட்டில் ஏஞ்சலஸ் ஆங்கில மேனிலைப் பள்ளி, மான்ட்போர்ட் பள்ளியை வென்றது.போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு சி.ஐ.எஸ்.சி.இ., அமைப்பின் சான்றிதழ், முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற பள்ளி அணிகளுக்கு சான்றிதழும் வழங்கி, ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளி தாளாளர் இளங்கோ ராமசாமி பாராட்டினார்.