/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மானியத்தில் கோழிக்குஞ்சு விண்ணப்பிக்க யோசனை
/
மானியத்தில் கோழிக்குஞ்சு விண்ணப்பிக்க யோசனை
ADDED : அக் 04, 2024 01:06 AM
மானியத்தில் கோழிக்குஞ்சு
விண்ணப்பிக்க யோசனை
ஈரோடு, அக். 4-
ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற, 38,700 பெண்களுக்கு, நாட்டின கோழிக்குஞ்சுகள், 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம், ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு, 40 கோழிக்குஞ்சு வழங்கப்படும். மாவட்டத்தில் ஒரு யூனியனுக்கு, 100 பயனாளி என, 1,400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விதவை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோழி வளர்ப்பில் ஆர்வம் இருக்க வேண்டும். பயனாளி சொந்த செலவில், 3,200 ரூபாயில் கொள்முதல் செய்திட திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியானவர்கள், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஜாதிச்சான்று, பிற ஆவணங்கள், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகலுடன், அருகே உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு ஈரோடு பகுதியினர், 94439 41443, கோபி பகுதியினர், 98427 59545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.