ADDED : ஜூன் 12, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அந்தியூர்
தாலுகாவில், 1950-60ல் பொது, இதர பிரிவினருக்கு வழங்கப்பட்ட
நிபந்தனை பட்டா பூமிக்கான 'ஆ' பதிவேடு, கணினி சிட்டாக்களை,
குறிப்பிட்ட காலத்துக்குள் நிபந்தனைக்கு உட்பட்ட பட்டா என்பதை
நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை
விண்ணப்பித்த, 293 இனங்களுக்கு நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
தகுதியான
பட்டாதாரர்கள், நில ஒப்படை வழங்கப்பட்டதற்கான அசல் நில ஒப்படை
ஆணை, பதிவு பெற்ற ஆவணங்கள், பட்டா, சிட்டா, வில்லங்க சான்று, இதர
விபரங்களுடன் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் வரும், 17, 18, 19,
23ல் நாட்களில் நடக்கும் ஜமாபந்தியில் விண்ணப்பிக்கலாம்.
