ADDED : பிப் 29, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு விற்பனை குழு அலுவலகத்தில் அனைத்து ஒழுங்கு முறை விற்பனை கூடங்களின் மாதாந்திர ஆய்வு கூட்டம், வேளாண் துணை இயக்குனர் சாவித்திரி தலைமையில் நடந்தது.
இதில் அலுவலர் பாலமுருகன் பேசியதாவது: ஒழுங்கு முறை விற்பனை கூட சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பொருளீட்டு கடன் பெறலாம். ஈரோடு விற்பனை குழுவில் உள்ள, 18 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், 54,101 டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் உள்ளன.
இவற்றில் குறைந்த வாடகையில் வேளாண் விளை பொருட்களை இருப்பு வைத்து கொள்ளலாம். அதன் பேரில் குறைந்த வட்டியில் பொருளீட்டு கடனை, ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மற்றும் வங்கிகள் மூலம் பெறலாம். இவ்வாறு பேசினார்.

