ADDED : மே 29, 2026 06:00 AM
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர், மாணவியருக்காக, 36 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள், மாணவர்களுக்கு சிவகிரி, கோபி, சென்னிமலை, வெள்ளோடு, நம்பியூர், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, அரச்சலுார், மலையம்பாளையம், அந்தியூர், குருவரெட்டியூர், தேவர்மலை, காவிலிபாளையம் என, 16 விடுதிகள், மாணவியருக்கு அவல்பூந்துறை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, அத்தாணி, காவிலிபாளையம், பவானி, குருவரெட்டியூர், மூங்கில்பட்டி, சத்தியமங்கலம், பங்களாபுதுார் என, 11 விடுதிகள் உள்ளன.
கல்லுாரி, பாலிடெக்னிக் விடுதிகளாக மாணவர்களுக்கு ஈரோடு, கோபி, பெருந்துறை, வேலம்
பாளையம், அந்தியூர் என, 5 விடுதிகள், மாணவியருக்கு சித்தோடு, கோபி, புன்செய் புளியம்பட்டி, திட்டமலை என, 4 விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் சேரலாம். விடுதியில், 3 வேளை உணவு, தங்கும் வசதி இலவசம். தகுதியானவர்கள் அந்தந்த விடுதி காப்பாளர்கள், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும், 18 க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கு, ஜூலை, 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே, 5 இடங்கள் உள்ளன.
