ADDED : ஆக 02, 2026 06:41 AM
ஈரோடு:மத்திய
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும்
அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதி உடைய அமைப்பு சாரா
தொழிலாளர்களுக்கு, 18 முதல், 40 வயது வரையிலான
தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில்
பயனாளிகள் மாதம் தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தினால்,
மத்திய அரசும் அதே பங்களிப்பை வழங்கும். 60 வயதை அடைந்த பின், மாதம்,
3,000 ரூபாய் உறுதியான ஓய்வூதியம் பெறலாம்.
சுற்றுலா
வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா வாகன
ஓட்டுனர்கள், போக்குவரத்து சேவை வழங்குனர், விடுதி, விருந்தோம்பல்
துறை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கைவினை கலைஞர்கள்,
தெருவோர வியாபாரிகள், கைவினை பொருள் உற்பத்தியாளர்கள், உணவகம்,
உணவு சேவை வழங்குபவர், சுற்றுலா துறையுடன் தொடர்புடைய பிற சேவை
வழங்குனர் இதற்கு தகுதியானவர்கள். கூடுதல் விபரத்தை, 'சுற்றுலா
அலுவலர், சுற்றுலா அலுவலகம், 7 வது தளம், புதிய கட்டடம், கலெக்டர்
அலுவலகம், ஈரோடு, போன்: 73977 15683' என்ற அலுவலகத்தில் அறியலாம்.
