/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், தாராபுரத்தில் சிலைகள் கரைப்பு ஊர்வலம்
/
காங்கேயம், தாராபுரத்தில் சிலைகள் கரைப்பு ஊர்வலம்
ADDED : செப் 08, 2024 07:33 AM
காங்கேயம்: காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சதுர்த்தி விழாவையொட்டி, வி.ஹெச்.பி., அமைப்பின் சார்பில், 15க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதில் காங்கேயம் நகரில் நேற்று முன்தினம், 14 விநாயகர் அமைத்து பூஜை நடந்தது.
நேற்று பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். மாலையில் களிமேட்டில் நடந்த நிகழ்சிக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் சிவக்குமார், நகர செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர். உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சங்கரகோபால் சிறப்புரையாற்றினார். மாலை, 5:00 மணியளவில்
விசர்ஜன ஊர்வலத்தை வெங்கடேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று பழையகோட்டை ரோடு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நிறைவு
பெற்றது. அங்கிருந்து வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டு திட்டுப்பாறை கீழ்பவானி கால்வாயில் கரைக்கப்பட்டது.
காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் தலைமையில், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட, 70 போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர். ஊர்வலத்தில் பா.ஜ., நிர்வாகிகள் நரேந்திரன், ஸ்ரீராம், சந்தனகுமார், தமிழர் சிந்தனை பேரவை செந்தில்குமார்,
பெண்கள் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தாராபுரத்தில்...தாராபுரம், உடுமலை ரவுண்டானா அருகே, நேற்று மாலை இந்து முன்னேற்ற கழகம் சார்பில், விநாயகர் சிலை ஊர்வலம்
தொடங்கியது. மாநில தலைவர் கோபிநாத் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் கோமதி தலைமை வகித்தார். இதில் மூன்று
விநாயகர் சிலைகள் மட்டுமே இடம் பெற்றன. மூன்றும் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.