என்னை தேர்ந்தெடுத்தால் விசுவாசத்துடன் பணிபுரிவேன்: தோப்பு வெங்கடாச்சலம்
என்னை தேர்ந்தெடுத்தால் விசுவாசத்துடன் பணிபுரிவேன்: தோப்பு வெங்கடாச்சலம்
ADDED : ஏப் 11, 2026 05:47 AM

பெருந்துறை; பெருந்துறை தொகுதி தி.மு.க., வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம், பெத்தாம்பாளையம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், நேற்று தீவிர பிர-சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம், என்னை தேர்ந்தெடுத்தால் தொகுதி மக்களுக்கு நன்றி, விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்று கூறினார்.
பெத்தாம்பாளையம் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட பொன்னன்டான் வலசு, சூரியம்பாளையம், செல்-லப்பகவுண்டன் வலசு, கருக்கம்பாளையம், எளையாம்பாளையம், கோவில்பாளையம், கோமையன் வலசு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் தீவிர வாக்கு சேக-ரிப்பில் ஈடுபட்ட தோப்பு வெங்கடாச்சலம் பேசிய-தாவது:பெருந்துறை தொகுதியில், 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ., அமைச்சராக, நான் இருந்தபோது ஒவ்வொரு ஊரிலும் தரமான இருக்கைகளுடன் கூடிய அழகான நிழற்கூடம் அமைத்து தந்தேன். எந்நேரமும் தொகுதி மக்கள் என்னை சந்தித்து குறை கூறி, அதற்கான நிவாரணம் பெற உதவி இருக்கிறேன்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு பாலிடெக்னிக் அமைய பாடுபட்டேன். ஒவ்வொரு ஊருக்கும் தேவையான மக்கள் பணிகளை செய்து கொடுத்துள்ளேன். அத்திக்கடவு-அவினாசி திட்-டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் முழு பங்காற்றி இருக்கிறேன்.
தி.மு.க., அரசு மீண்டும் பொறுப்பேற்றதும், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி என வீட்டுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க, 8,000 ரூபாய் மதிப்புள்ள கூப்பன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் எட்டாம் வரை விரிவுபடுத்தப்-படும். என்னை தேர்ந்தெடுத்தால் தொகுதி மக்க-ளுக்கு, அதே நன்றி, விசுவாசத்துடன் பாடுபட்டு, வளர்ச்சி திட்டங்களை ஏற்படுத்துவேன். இவ்-வாறு பேசினார்.
