தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொட்டியில் தேன் கூடு கலைந்தால் பெரும்பாடு

தொட்டியில் தேன் கூடு கலைந்தால் பெரும்பாடு

தொட்டியில் தேன் கூடு கலைந்தால் பெரும்பாடு


ADDED : ஜூன் 10, 2026 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 02:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னிமலை:சென்னிமலை யூனியன் அலுவலகம், காங்கேயம் ரோட்டில் உள்ளது. நாள் தோறும் பல்வேறு தேவைகளுக்காக, நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். டவுன் பஞ்., நிர்வாக கட்டுப்பாட்டில், அலுவலக வளாகத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. தொட்டி மேல் பகுதியில் பெரிய அளவிலான தேன் கூடு உள்ளது. கூட்டில் இருந்து நுாற்றுக்கணக்கான தேனீக்கள் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று தேன் சேகரித்து திரும்புவது வழக்கமாக உள்ளது. பறந்து செல்லும்போதும், திரும்பும்போது குறுக்கே யார் வந்தாலும், கொட்டி பதம் பார்க்கின்றன. இதை அறிந்த அலுவலக அதிகாரிகள், நம்மை போட்டுத் தாக்கி விடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர். தேன் கூட்டை அப்புறப்படுத்தி பயத்தை போக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us