ADDED : அக் 24, 2024 01:27 AM
அ நிறம் | அளவு
சட்ட விரோதமாக மது விற்பனை; இருவர் கைது
கோபி, அக். 24-
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், சத்தியமங்கலம் மற்றும் கவுந்தப்பாடி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது திருப்பூரை சேர்ந்த செல்வம், 32, பவானியை சேர்ந்த ரவீந்திரன், 48, ஆகியோர் தலா, 26 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக, போலீசார் அவர்களை கைது செய்தனர்.
