ADDED : மே 24, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கோபி: இந்து முன்னணியின் ஈரோடு மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில், கோபியில் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார் பேசினார்.
ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும். கோவில் சொத்துக்கள் மற்றும் தங்கம் உட்பட அனைத்தும் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றினர்.
