/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
/
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையில் டயக்னாஸ்டிக் மையம் திறப்பு விழா
ADDED : ஜன 01, 2025 06:13 AM
ஈரோடு: ஈரோடு கே.எம்.சி.ஹெச்., ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், அதிநவீன வசதிகளுடன் டயக்னாஸ்டிக் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் மருத்துவமனை தலைவரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்தனர். அமைச்சர் முத்துசாமி டயக்னாஸ்டிக் மையத்தை திறந்து வைத்தார். விழாவில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், மேயர் நாகரத்தினம், ஒன்றிய செயலாளர் சாமி மற்றும் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி கூறியதாவது: அதிநவீன வசதியுடன் கூடிய டயக்னாஸ்டிக் மையம், உலகத்தரமான மருத்துவ சேவைகளை அளித்திட உறுதுணையாக விளங்கும். அனைத்து வித பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் தேவையில்லாத பரிசோதனைகளை செய்ய நிர்பந்தம் செய்வதில்லை. சென்னை, டில்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் கிடைக்கும் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் கொங்கு மண்டலத்தில் கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

