/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4 இடங்களில் நான்காம் நாளாக வருமான வரித்துறை சோதனை
/
4 இடங்களில் நான்காம் நாளாக வருமான வரித்துறை சோதனை
ADDED : ஜன 11, 2025 02:37 AM
ஈரோடு: முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உறவினர் வீடு, அலுவலகம் உட்பட நான்கு 4 இடங்களில், நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்தது.
ஈரோடு, அவல்பூந்துறை அருகே வேலாங்காட்டுவலசை சேர்ந்-தவர் ராமலிங்கம். என்.ஆர்.கட்டுமான நிறுவனம், திருமண மண்-டபம், ஸ்டார்ச் மாவு உற்பத்தி ஆலை உட்பட பல்வேறு நிறுவ-னங்களை நடத்தி வருகிறார். இவரது நிறுவனங்களுக்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் இயக்குனர்களாக உள்ளனர். முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., உறவினரான ராமலிங்கம், பல்-வேறு மாநிலங்களில் ஒப்பந்த பணிகள் எடுத்து செய்து வரு-கிறார்.
வரி ஏய்ப்பு புகார் தொர்பாக கடந்த, 7ம் தேதி முதல் ராமலிங்-கத்தின் வீடு மற்றும் அலுவலகம் உள்ள வேலாங்காட்டுவலசு, மூலப்பாளையம் ஆகிய இடங்களிலும், ஆர்.பி.பி., செல்வசுந்-தரம் என்பவரது வீடு மற்றும் அலுவலகமான ரகுபதிநாயக்கன்பா-ளையம், முள்ளாம்பரப்பில், இரண்டு இடம் என நான்கு இடங்-களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.

