தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

வாழைத்தார் வரத்து அதிகரிப்பு

வாழைத்தார் வரத்து அதிகரிப்பு


ADDED : மார் 09, 2026 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் கோவில் திருவிழா, முகூர்த்த நாட்களை முன்னிட்டு, ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கோபி, சத்தி, அத்தாணி, அம்மா-பேட்டை, குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனி பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதிகளில் அறுவடை செய்-யப்படும் வாழைத்தார், ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகி-றது.

மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் கோவில் திருவிழா நடப்பதால், கடந்த வாரத்தை காட்டிலும் நேற்று அதிகளவில் வாழைத்தார் வரத்தானது. இதனால் செவ்வாழை தார் கிலோ-65 ரூபாய், தேன்வாழை--38, பூவன்--25, ரஸ்தாளி--44, மொந்தன்-25, பச்சைநாடன்--40, மோரிஸ்--24, கதலி--50 ரூபாய்க்கு விற்பனையா-னது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us