/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு
/
தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு உயர்வு
ADDED : பிப் 28, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு
மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் தானிய
ஈட்டுக்கடன் உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, 25 லட்சம்
ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி தொடக்க வேளாண் கூட்டுறவு
கடன் சங்கங்கள், ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தி, பவானி ஆகிய வேளாண்
உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் உள்ள, 222
கிடங்குகளில் பொருட்களை இருப்பு வைத்து, வெளிச்சந்தை மதிப்புக்கு
ஏற்ப, 60 முதல், 75 சதவீதம் தானிய ஈட்டுக்கடனை, 12 முதல், 14 சதவீத
எளிய வட்டியில் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

