/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பு
/
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பு
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பு
ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வருகை அதிகரிப்பு
ADDED : அக் 01, 2025 01:50 AM
ஈரோடு:ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் உள்ள கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம், மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதிகளில், நேற்றைய ஜவுளி சந்தை விற்பனை அமோகமாக நடந்தது.ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள் நேரடி விற்பனை கடைகள், சாலையோர கடைகள், வாகனங்கள், குடோன்களில் வைத்து விற்பனையில் ஈடுபட்டனர்.
தீபாவளிக்கு இன்னும், 20 நாட்களே உள்ளதால் நேற்று தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பொதுமக்கள், கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள் அதிகமாக வந்து, ஜவுளிகளை வாங்கி சென்றனர்.
வெகு நாட்களுக்கு பின் மொத்த ஜவுளி விற்பனை, ஆர்டர்கள் என அதிகமாக நடந்தது. தீபாவளிக்கு தேவையான அனைத்து வகை ஆடைகளையும் பொதுமக்கள் வாங்கி சென்றனர். வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இனி வரும், 4 வாரங்களுக்கும் ஜவுளி சந்தையில் இதைவிட கூடுதல் கூட்டம் வரும் என, வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.