sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி

/

பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி

பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி

பனி மூட்டத்தில் மூழ்கிய ஏரி மாநகரிலும் அதிகரித்த பனி


ADDED : ஜன 02, 2026 04:46 AM

Google News

ADDED : ஜன 02, 2026 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம், புது மேட்டூர், சின்னத்தம்பிபாளையம், அண்ணாமடுவு, சங்கராப்-பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், நேற்று அதிகாலை, 5:00 மணி தொடங்கி, காலை, 11:00 மணி வரை கடும் பனிப்-பொழிவு காணப்பட்டது.

இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றோர், முகப்பு விளக்கை எரியவிட்டபடி பயணித்தனர். பனிப்பொழிவுக்கு இடையில் காலை, 9:30 மணிக்கு தொடங்கிய மிதமான மழை, 20 நிமிடத்துக்கும் மேல் நீடித்தது. கடும் பனிப்பொழிவால் அந்தியூரை அடுத்த கெட்டிசமுத்திரம் ஏரி பனிமூட்டத்தால் மூடி ரம்மியமாக காட்சியளித்தது. ஏரிக்கரை ஒருவழிப்பாதை என்பதால், அவ்வழியே சென்ற வாகன ஓட்-டிகள், மிதமான வேகத்தில், பனிமூட்டத்தையும் இதமான குளி-ரையும் ரசித்தபடி சென்றனர்.

மாநகரிலும்...

ஈரோடு மாநகரில் நேற்று

அதிகாலை, 3:௦௦ மணிக்கு தொடங்கிய சாரல் மழை, ஒரு மணி நேரத்துக்கு நீடித்தது. ஆனாலும் காலை, 7:௦௦ மணிக்கு கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. புகை மண்டலம் போல் பனி-மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு

ஆளாகினர்.

அரை மணி நேரத்தில் பனிமூட்டம் விலகி இயல்பு நிலை திரும்-பியது. இதனிடையே லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் மதியம், 12:௦௦ மணி முதல், 12:30 வரை கனமழை வெளுத்து வாங்கியது.






      Dinamalar
      Follow us