sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆதார் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; அறவே அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

ஆதார் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; அறவே அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

ஆதார் மையங்களில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்; அறவே அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு


ADDED : செப் 14, 2024 07:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 07:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் ஆதார் மையங்களில், மக்கள் கூட்டம் குறையாத நிலையில், அடிப்படை வசதி கேள்விக்குறியாகி உள்ளது. ஆதார் அட்டையை மக்களின் அன்றாட வாழ்வியலில், தற்போது அத்தியாவசியமாக்கி விட்டனர். ஆதார் கார்டில் பிழைகளை திருத்தவும், பிற தேவைகளுக்காகவும், ஆதார் மையங்களுக்கு நாள்தோறும் நுாற்றுக்கணக்கானோர் செல்வது தற்போது சகஜமாகி விட்டது. ஈரோட்டில் தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் பிழை திருத்தம், முகவரி மாற்றத்துக்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் புதிதாக ஆதார் கார்டு எடுத்தல், மாற்றங்கள் இன்றி புதுப்பித்தல் நடக்கிறது. இதில் எந்த ஒரு மையத்திலும், எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. குறைந்தபட்சம் மக்கள் அமர போதிய இருக்கை கூட இல்லை. காலை முதல் மாலை வரை நிற்க வேண்டிய நிலை தொடர்கிறது. தினமும் குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே பிழை திருத்தம், முகவரி மாற்றம், புதிய கார்டு பெறுதல் போன்ற பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசு அலுவலர்கள் கவனித்து ஆதார் மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கட்டண விபர பலகையையும் ஆதார் மையங்களில் மக்களுக்கு தெரியும் வகையில் வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us