/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
. ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா
/
. ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 15, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.
காலை, 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்துகிறார். பின், போலீஸ் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுதாரர்களை கவுரவித்து, அரசு துறைகளில் சிறப்பாக பணி செய்த அலுவலர், பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து அரசு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி
நடக்கவுள்ளது.