ADDED : ஏப் 05, 2026 04:55 AM
அ நிறம் | அளவு
ஈரோடு :ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட, சுயேட்சை வேட்பாளரான சித்தோடு பகுதியை சேர்ந்த மணிகண்ணன் நேற்று வந்தார். காந்தி வேடமணிந்து வந்தவர், தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அர்பித் ஜெயினிடம் மனுதாக்கல் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது: சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். தமிழகத்தில் மது போதை, லஞ்சம், ஊழல் அதிகரித்து வருகிறது. இதை ஒழிக்க போராடுவேன். இவ்வாறு கூறினார்.
