/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீமானை வெளியேற்ற வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர் தர்ணா
/
சீமானை வெளியேற்ற வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர் தர்ணா
சீமானை வெளியேற்ற வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர் தர்ணா
சீமானை வெளியேற்ற வலியுறுத்தி சுயேட்சை வேட்பாளர் தர்ணா
ADDED : பிப் 03, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த வெண்ணிலா போட்டியிடுகிறார். நா.த.க., கட்சியினர் மீது புகார் கொடுக்க வேட்பாளர் வெண்ணிலா மற்றும் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டு, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும், நா.த.க., வேட்பாளர் வேட்பு மனுவை நிராகரிக்கவும் கோஷம் எழுப்பினர். ஈரோடு டவுன் போலீசார் வந்து, பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.