/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'சாருக்கு' எதிராக 'இண்டி' கூட்டணி ஆர்ப்பாட்டம்
/
'சாருக்கு' எதிராக 'இண்டி' கூட்டணி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:03 AM
தாராபுரம் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) , தமிழத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகளான இண்டி கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதை நிறுத்த வலியுறுத்தியும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க. மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட காங்., தலைவர் தென்னரசு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். எஸ்.ஐ.ஆர்., பணியை கண்டித்து பேசினர். தாராபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஓய்வு தாசில்தார் சங்கமம்
தாராபுரத்தில் தாசில்தாராக பணிபுரிந்து, மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்றவர் திரவியம். மதுரை மாவட்டம் மேலுாரை சேர்ந்தவர். பி.ஏ.பி.எல்., படித்தவர். தாராபுரத்தில் தி.மு.க., கூட்டணி சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டம் முடிந்த பின், திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலையில், தி.மு.க.,வில் சேர்ந்தார்.அவருக்கு தி.மு.க., துண்டு அணிவித்து நிர்வாகிகள் வாழ்த்து கூறினர்.

