தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக மறியல்

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக மறியல்

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் 2வது நாளாக மறியல்


ADDED : ஜூலை 24, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேட்டை கண்டித்தும், 'நீட்' தேர்வை ரத்து செய்யவும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, டில்லி, சென்னையில் பல்வேறு அமைப்பின் மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் போராட்டங்கள் நடக்கிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி இரண்டாவது நாளாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஈரோட்டில் நேற்று போராட்டம் நடந்தது. மாவட்ட செயலர் விஸ்வநாதன், மாணவர் சங்க மாவட்ட செயலர் நவீன் முன்னிலையில் மாணவர்கள் பேரணியாக வந்தனர். திருப்பூர் குமரன் சிலை அருகே வந்தபோது, போலீசார் தடுத்து 'அனுமதி இல்லை' என்றதால் சாலையில் படுத்து கொண்டனர். இதனால் வாலிபர்களை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றினர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கினர். மறியலால், 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us