ADDED : பிப் 05, 2026 04:22 AM

பெருந்துறை: மும்பை டாடா குழுமம் மற்றும் உமங் அமைப்பு இணைந்து, சமூக மற்றும் உணர்ச்சிசார் கற்றல் என்னும் ஒரு வருட கலைக்-கல்வி பயிற்சி பட்டறை வகுப்பினை, ஒவ்வொரு வருடமும், ஒரு குழுவிற்கு, 50 மாணவர்கள் என்ற அடிப்படையில் நடத்தியது. பின்னர் இந்திய அளவில் நுழைவுத் தேர்வை
நடத்தியது.
அண்மையில் நடந்த தேர்வில், தேர்வான தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று மாணவர்களுள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த, ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியின் ஆசிரியரும், இப்-பள்ளியின் முன்னாள் மாணவியுமான கௌசிகா ஈஸ்வரமூர்த்தி ஒருவர். இவருக்கு, ஒரு வருட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இக்கல்வி பயிற்சி வகுப்பிற்கான செலவுத் தொகை முழுவதையும் நிறுவனமே பொறுப்பேற்றுக் கொண்டு, சிறப்பு வகுப்புகளை இணையம் வாயிலாகவும், நேரடி வகுப்பு வாயிலாகவும் நடத்-தினர். இத்தேர்வில், 50 மாணவர்களுள் முதல் தரவினை பெற்ற கௌசிகா ஈஸ்வரமூர்த்தியை, டாடா சமூக அறிவியல் நிறுவன துறைத் தலைவர் கவுரவித்து பாராட்டினார். அத்துடன், முதல் தரம் பெற்ற அவருக்கு மேலும், சிறப்பு சேர்ப்பிக்கும் விதமாக, இனிவரும் அடுத்தடுத்த குழுவினருக்கும் வழிகாட்டி நிபுணர் என்ற தகுதியோடு சிறப்பு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள கௌசிகா ஈஸ்வர-மூர்த்தியை, பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி, முதல்வர் உமய-வள்ளி இளங்கோ மற்றும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள்
பாராட்டினர்.
