ADDED : ஏப் 18, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
கோபி :தாளவாடி மலை தலைமலையை சேர்ந்தவர் மகாதேவசாமி, 46; திங்களூர் போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர். போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட காசிபாளையம் பகுதிக்கு பல்சர் பைக்கில் நேற்று மாலை சென்றார்.
மொடச்சூர் அருகே வடுகபாளையம் என்ற இடத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோபி போலீசார் விசாரிக்கின்றர்.
