ADDED : செப் 24, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி :புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கீதா, கடந்த வாரம் நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு ஆவண காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், புன்செய்புளியம்பட்டி ஸ்டேஷன் பணியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் கோவை மாவட்டம் காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை புன்செய்புளியம்பட்டிக்கு இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி., உத்தரவிட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.