/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காற்று மாசு அளவிடும் கருவிகளை கூடுதலாக அமைக்க வலியுறுத்தல்
/
காற்று மாசு அளவிடும் கருவிகளை கூடுதலாக அமைக்க வலியுறுத்தல்
காற்று மாசு அளவிடும் கருவிகளை கூடுதலாக அமைக்க வலியுறுத்தல்
காற்று மாசு அளவிடும் கருவிகளை கூடுதலாக அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 06, 2025 01:00 AM
பெருந்துறை, பெருந்துறை
சிப்காட்டில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், மாசு தடுப்பு
தொடர்பான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது.
இதில்
சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த
வேண்டும். திறந்தவெளியில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்ற வேண்டும்.
சிப்காட் வளாகத்தில் சட்ட விரோத செயல்களை தடுக்க, கண்காணிக்க, நவீன
'சிசிடிவி' கேமராக்களை பொருத்த
வேண்டும் சிப்காட் தொழிற்சாலைகளால்
காற்று மாசு அதிகரித்து வருகிறது. தற்போது மாசை அளவிடும் கருவி ஒன்று
மட்டுமே உள்ளது. இது போதுமானதல்ல. காற்று மாசை அளவிட சிப்காட்
வளாகத்தில் மேலும் இரு இடங்களில் அமைக்க வேண்டும் என்பது உள்பட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.