ADDED : பிப் 11, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: காங்கேயத்தில் இருந்து செல்லும் பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை வாய்க்கால் மூலம், 48 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் மண் உள்ள பகுதியில் தண்ணீர் சரியாக செல்லாமல் இருந்தது.
இதனால் கான்கீரிட் அமைப்பது, சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன்படி வெள்ளகோவில் அருகே கிளை வாய்க்காலில் பணி தொடங்கி நடக்கிறது.
இதை ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டப்பணி நீர்வளத்துறை, திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்புச்செல்வன் ஆய்வு செய்தார். காங்கேயம் உதவி செயற்பொறியாளர் வடிவேல், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
