ADDED : ஆக 10, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் டி.என்.பாளையம் அடுத்துள்ள, குண்டேரிப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால், குளம் போல் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் வாணிப்புத்துார், கொங்கர்பாளையம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், குண்டேரிப்பள்ளம் அணையின் கரையோரத்தில் உள்ள வண்டல் மண், கிராவல் மண் உள்ளிட்டவைகளை அள்ள அனுமதிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், நேற்று நீர்வளத்துறை உதவிபொறியாளர் மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான குழுவினர், விவசாயிகள் அணையில் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கும் பகுதிகளை கண்டறிந்து, வனத்துறையினர் வசம் உள்ள இடங்களை குறிப்பிட்டு அடையாளமிடும் பணிகளை மேற்கொண்டனர்.