ADDED : டிச 26, 2024 01:38 AM
தார் சாலை பணிகள் ஆய்வு
பவானி, டிச. 26-
பவானி உட்கோட்டத்தை சேர்ந்த மாநில நெடுஞ்சாலையில், பவானி-அந்தியூர் - செல்லம்பாளையம் சாலையில், தொட்டிபாளையம் முதல் செலம்பகவுண்டம்பாளையம், தாளப்பையனுார், வாய்க்கால்பாளையம் வரை, 3.95 கி.மீ., நீளத்திற்கு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலையின் ஓடுதளத்தை
மேம்பாடு செய்யும் பணி மூன்று கோடி ரூபாய் மதிப்பில் நடந்தது.சாலையின் இருபுறங்களிலும், எதிர்வரும் வாகனங்கள் தெளிவாக தெரியும் வண்ணம் புதர்கள் அகற்றப்பட்டு, வளைவுகள் சீர் செய்யப்பட்டு தார் சாலை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவுற்ற நிலையில் சாலை பணியை திருப்பூர் (தரக்கட்டுப்பாடு) கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் சாந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.பவானி உதவி கோட்ட பொறியாளர் ராஜேஷ் கண்ணா, உதவி பொறியாளர் சேகர், இளநிலை பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) குழந்தை வேலவன், சாலை ஆய்வாளர் ஜோதிபாசு, திருமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

