/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகளை கண்காணிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 31, 2024 06:24 AM
ஈரோடு: தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் உள்ள அடிப்படை வசதிகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என அதி-காரிகளுக்கு, மாநகராட்சி கமிஷனர் மணிஷ் அறிவுறுத்தியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் மணிஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது கமிஷனர் மணிஷ் பேசியதாவது: தீபா-வளி பண்டிகை என்பதால், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் வழக்கத்தை விட அதிகம் பேர் வருவர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதி-களை செய்ய வேண்டும். பழுதடைந்த மின் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளில் நீர் இருப்பை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க வேண்டும். கழிப்பிடங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒரு-முறை சுத்தப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு கடைகள் அப்புறப்படுத்த வேண்டும். பஸ் ஸ்டாண்டை 24 மணி நேரமும் கண்காணித்து, அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். இவ்-வாறு பேசினார். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பழுதடைந்த, 50க்கும் மேற்பட்ட மின் விளக்குகளுக்கு பதிலாக, புதியதாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டது.