ADDED : அக் 30, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில்வே ஸ்டேஷனில்
தீவிர சோதனை
ஈரோடு, அக். 30-
தீபாவளி நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள், பயணிகள் ரயில்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கி உள்ளனர். பலர் பட்டாசு எடுத்து செல்லக்கூடும் என்பதால் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் கூட்டாக இணைந்து சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்.
பயணிகளின் உடமை நேற்று முதல் ஸ்கேனர் உதவியுடன் பரிசோதிக்கின்றனர். சேலம் ரயில்வே கோட்ட மோப்ப நாய் பவானி உதவியுடன், ரயில்வே ஸ்டேஷன் வளாகம் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. பட்டாசு எடுத்து செல்வது ஆபத்தானது மற்றும் தண்டனைக்குரியது என போலீசார் பயணிகளிடம் வலியுறுத்தினர்.

