/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்காச்சோள பயிர் காப்பீட்டுக்கு ஆர்வம்
/
மக்காச்சோள பயிர் காப்பீட்டுக்கு ஆர்வம்
ADDED : டிச 09, 2025 10:26 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டை விட இந்தாண்டு, மக்காளச்சோள பயிருக்கு காப்பீடு செய்வதில் விவசாயிகள் மத்தியில் ஆர்வம் அதி-கரித்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், நெல், கொண்டைக்கடலை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்-றனர்.மாவட்டத்தில், 18 ஆயிரம் எக்டர் பரப்பளவில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடு-கின்றனர்.
பொதுவாக, மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில் விவசாயிகள் பெரி-தாக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.ஆனால், கடந்த இரு ஆண்டாக மக்காச்சோளப் பயிருக்கு காப்பீடு செய்து கொள்வதில், விவசா-யிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது; நடப்பு சீசனில் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு முடிவுற்றது.
வேளாண் துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, மக்காச்சோள பயிருக்கு கடந்தாண்டு, 2,200 விவசாயிகள் காப்பீ-டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்-தாண்டு, 3,239 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டை விட, 1,000 விவசாயிகள் கூடுத-லாக பயிர்க்காப்பீடுக்கு விண்ணப்பித்துள்ளனர். இயற்கை சீற்றங்களால் மக்காச்சோள பயிருக்கு சேதம் ஏற்படும் போது, காப்பீடு தொகை பெறுவது எளிமையாக இருக்கிறது. கடந்தாண்டு, காப்பீடு தொகை வேண்டி விண்ணப்பித்த, 1,271 விவசா-யிகளுக்கு, 3.62 கோடி ரூபாய் காப்பீடு நிறுவனம் வாயிலாக விடுவிக்கப் பட்டுள்ளது;
இதுபோன்ற காரணங்களால், விவசாயிகளுக்கு நம்பிக்கை அதிகரித்து, காப்பீடு செய்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. இவ்வாறு கூறினார்.

