ADDED : ஏப் 27, 2026 04:05 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டிற்கு, நேற்று துாத்துக்குடியில்
இருந்து, 32 கிலோ எடையில் ஷீலா மீன் வந்தது. ஒரு கிலோ, ரூ.800க்கு
விற்கப்பட்டது. இதே போல், 17 கிலோ எடையில் சுறா மீன் வந்திருந்தது.
இதுவும் கிலோ, ரூ.800க்கு விற்கப்பட்டது. 32 கிலோ எடையிலான ஷீலா
மீனை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் மீன் பிடி தடை
காலம் இருப்பதால் கேரளாவில் இருந்து பிரதானமாக மீன்கள்
வரத்தாகிறது. மோட்டார் படகுகள் மூலம் மீன் பிடிக்க மட்டுமே தடை
உள்ளது. துடுப்பு மூலம் படகில் சென்று மீன் பிடிக்கலாம். இதனால் ஷீலா,
சுறா மீன்கள் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
