/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் பெற நேர்காணல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் பெற நேர்காணல்
ADDED : செப் 28, 2024 01:33 AM
மாற்றுத்திறனாளிகளுக்கு
ஸ்கூட்டர் பெற நேர்காணல்
ஈரோடு, செப். 28-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் அனுமதிக்கான நேர்காணல் தேர்வு ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி தலைமை வகித்தார். மாவட்ட அளவில், 812 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த, 12, 13, 20ல் தலா, 200 பேருக்கு நேர்காணல் நடந்த நிலையில் நான்காம் கட்டமாக 200 பேருக்கு நேற்று நேர்காணல் நடந்தது. டாக்டர்கள் குழுவினர், தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து நேர்காணல் நடத்தினர். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, படிப்படியாக ஸ்கூட்டர் வழங்கப்படும், என அலுவலர்கள் தெரிவித்தனர்.