/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் ஐ.என்.டி.யு.சி., நம்பிக்கை
/
டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் ஐ.என்.டி.யு.சி., நம்பிக்கை
டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் ஐ.என்.டி.யு.சி., நம்பிக்கை
டி.என்.பி.எஸ்.சி., தேர்வால் ஐ.என்.டி.யு.சி., நம்பிக்கை
ADDED : ஜூலை 30, 2025 01:24 AM
ஈரோடு ஈரோடு மாவட்ட ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க கவுன்சில் மண்டல கூட்டம், தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட காங்., தலைவர் மக்கள்ராஜன், ஒருங்கிணைப்பாளர் வில்சன் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு பின் மாநில தலைவர் ஜெகநாதன் கூறியதாவது:
மத்திய பா.ஜ., அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்துவதை, திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் போக்குவரத்து கழகம் உட்பட சில துறைகளில் சில குறைபாடுகள் உள்ளன. இவற்றை அரசிடமும், தொடர்புடைய துறைகளிடமும் தெரிவித்து தீர்வு காண்கிறோம். அரசு போக்குவரத்து கழகத்தில், 3,600 பணியிடங்களை நிரப்ப அரசு அறிவித்துள்ளது. இதை விரைவுபடுத்த வேண்டும். இத்தேர்வு டி.என்.பி.எஸ்.சி., மூலம் நடத்துவதால் திறமையான ஓட்டுனர், நடத்துனர் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.