ADDED : ஏப் 03, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, பெருந்துறை, முள்ளம்பட்டி, மலையம்பாளையம் ஊர் கிணறு தோட்டத்தை சேர்ந்தவர் தங்கராஜ், 55; இவரது குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்னை இருந்தது.
நேற்று மாலை தங்கராஜூக்கு சொந்தமான வயல்காட்டில் இருந்த, 60 கட்டு வைக்கோல் போர், வீட்டில் இருந்த நிலை கண்ணாடி, பேன், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை, தங்கராஜின் உறவினர் மோகன சுந்தரம் அடித்து உடைத்து தீ வைத்துள்ளார்.
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். சித்தோடு போலீசார் மோகன சுந்தரத்தை பிடித்து விசாரிக்கின்றனர்.
