இலவச ஜூட் பேக், பைல் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு
இலவச ஜூட் பேக், பைல் தயாரிப்பு பயிற்சிக்கு அழைப்பு
ADDED : மே 09, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு வரும், 20 முதல், ஜூன், 5 வரை, இலவசமாக ஜூட் பேக், பைல்கள், பெண்களுக்கான ேஹண்ட் பேக், வேலெட்
தயாரிக்க பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். ஈரோடு மாவட்ட கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள், 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கலாம். விபரம், முன்பதிவுக்கு, 0424 2400338, 87783 23213 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
