/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
/
ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : அக் 30, 2025 02:05 AM
ஈரோடு, அக். 30
ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க, அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும்  மாணவ,மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் அரசு பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தேர்வு நடக்கிறது. தேர்வு நவ.,29ல் நடக்க உள்ளது. தேர்வில் வெற்றி வெறும் மாணவ, மாணவியருக்கு நான்கு ஆண்டுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நேரடியாக தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. மாறாக, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் ஆன்லைனில் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். தங்கள்  திறனை வெளிப்படுத்த தயாராக உள்ள மாணவ, மாணவியர் ஊரக திறனாய்வு தேர்வுக்கு வரும், 4க்குள்  விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

