/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆரி எம்ப்ராய்டரி பயிற்சிக்கு அழைப்பு
/
ஆரி எம்ப்ராய்டரி பயிற்சிக்கு அழைப்பு
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், பெண்களுக்கான ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வரும், 20ம் தேதி முதல் ஜூன் 24 வரை நடக்கிறது.
பயிற்சி, சீருடை, உணவு இலவசம். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 18 வயதுக்கு மேல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.மேலும் விபரம் அல்லது முன்பதிரு செய்ய, 0424-2400338, 7200650604, 8778323213 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். ஈரோட்டில், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில், கனரா வங்கி கிராமப்புற வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.