ADDED : ஜூலை 16, 2025 01:19 AM
ஈரோடு,ஈரோடு மாவட்ட ஊர்காவல் படையில், 42 இடம் காலியாக உள்ளது. பணியாற்ற விரும்பு வோர், 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 20 முதல் 45 வயதுக்கு உட்பட்ட, ஆண்கள் உயரம்-167 செ.மீ.,; பெண்கள்-157 செ.மீ உயரம், உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டு இருக்க கூடாது. ஜூலை 16 (இன்று) முதல் 18 வரை விண்ணப்பம் வழங்கப்படும். என்.எஸ்.எஸ்., மற்றும் என்.சி.சி.யில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், 19ம் தேதி மதியம், 2:00 மணிக்குள் ஊர்காவல் படை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில், காலை, 10:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை பெற்று கொள்ளலாம். இத்தகவல் ஈரோடு மாவட்ட போலீஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.