ADDED : நவ 14, 2025 01:20 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட ஊர்காவல் படையில் காலி பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இதற்கு விருப்பமுள்ள, 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள், 167 செ.மீ.,; பெண்கள், 157 செ.மீ., உயரத்துடன் நல்ல உடல் தகுதி கொண்டிருக்க வேண்டும். எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்க கூடாது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி.,யில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை. விண்ணப்பம் இன்று முதல், 20ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்தவற்றை, 21ம் தேதி மதியம், 2:00 மணிக்குள் ஒப்படைக்க
வேண்டும்.
ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஊர் காவல் படை அலுவலகம் செயல்படுகிறது. ஊர் காவல் படையினர் பல்வேறு பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பணிக்கு பயன்படுத்தப்படுவர். இத்தகவலை ஈரோடு மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

