ADDED : அக் 08, 2024 03:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கலை பண்பாட்டு துறை, ஜவகர் மன்றம் சார்பில், ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப்போட்டி, 5, 8, 9, 12, 13, 16 வயது சிறார்களுக்கு இடையே குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் என நான்கு பிரிவுகளில் வரும், ௧௩ம் தேதி, ஈரோடு, பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.
போட்டி நடக்கும் அன்று காலை, 9:00 மணிக்கு முன்பதிவு செய்து பங்-கேற்கலாம். பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் அட்டை நகல், பள்ளி படிப்பு சான்றுடன் வர வேண்டும். அந்தந்த போட்-டிகளுக்கு தேவையான உடமைகளை கொண்டு செல்ல வேண்டும். ஒவிய போட்டியில், 40க்கு, 30 செ.மீ., ஓவியத்தாள் பயன்படுத்த வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, 0424 2610290, 99946 61754 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
