ADDED : ஜூலை 16, 2025 01:18 AM
ஈரோடு உயிர்ம வேளாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் விவசாயிக்கு, 'சிறந்த உயிர்ம உழவருக்கான நம்மாழ்வார் விருது' வழங்கப்படுகிறது. விருதுடன், 2 லட்சம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ், பதக்கமும் தரப்படும்.
இவ்விருது பெற, குறைந்தபட்சம், 1 ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்திருக்க வேண்டும். முழு நேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். பாரம்பரிய விதையை பயன்படுத்த வேண்டும். குறைந்தது, 3 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள், அக்ரிஸ் நெட் வலைதளத்தில், https://www.tnagrisnet.tn.gov.in/ல் வரும் செப்., 15க்குள், 100 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரத்துக்கு, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.