/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டய கணக்காளர் தேர்வு பயிற்சி பெற அழைப்பு
/
பட்டய கணக்காளர் தேர்வு பயிற்சி பெற அழைப்பு
ADDED : நவ 27, 2024 12:48 AM
பட்டய கணக்காளர் தேர்வு
பயிற்சி பெற அழைப்பு
ஈரோடு, நவ. 27-
தாட்கோ மூலம், 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியருக்கு, பட்டய கணக்காளர் - இடைநிலை, நிறுவன செயலாளர் - இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் - இடைநிலை ஆகிய போட்டி தேர்வில் பயிற்சி வழங்கப்படுகிறது. இளநிலை வணிகவியல் பட்டம் பெற்ற, குடும்ப வருவாய் ஆண்டுக்கு, 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
ஓராண்டு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி, உணவு தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். www.tahdco.comல் பதிவு செய்யலாம். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை நேரில் அல்லது, 0424-2259453 என்ற எண்ணில் அணுகலாம்.

